ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்ற சபையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (16) இடம்பெற்ற கட்சியின் எதிர்ப்புப் பேரணியை அடக்குவதற்கு பொலிஸார் மேற்கொண்ட தலையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (17) காலை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொலிஸார் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தினார்.