மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோரி அண்மையில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மாவனெல்ல பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.