உள்நாட்டு நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில், சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச கொள்வனவு விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 2025 ஆம் ஆண்டு சிறுபோகத்தின் போது ஒரு கிலோ நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கும், சம்பா 125 ரூபாவிற்கும், கீரிசம்பா 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.
எனினும், வரும் போகங்களில் விவசாயிகள் சம்பா மற்றும் கீரிசம்பா பயிர்ச்செய்கையில் அதிக ஆர்வம் காட்டுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, அவற்றின் விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டரிசி நெல்: ஒரு கிலோ 120 ரூபா (விலையில் மாற்றமில்லை)
சம்பா நெல்: ஒரு கிலோ 125 ரூபாவிலிருந்து 130 ரூபாவாக அதிகரிப்பு
கீரிசம்பா நெல்: ஒரு கிலோ 132 ரூபாவிலிருந்து 140 ரூபாவாக அதிகரிப்பு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சந்தையில் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கான தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






