இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன, முதற்கட்ட ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து உடனடியாகப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, வைத்தியர் பெல்லன பல்வேறு ஊடக தளங்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத பொது அறிக்கைகளை வெளியிட்டு சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளையும் பொது அமைதியின்மையையும் உருவாக்கியதாக தெரியவந்ததை அடுத்து, பொது சேவை ஆணைக்குழுவின் விதிமுறைகளின் கீழ் இந்த இடைநீக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.






