Date:

உயர் தர பரீட்சை விடைத்தாள்கள் தொடர்பில் வெளிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 78 45 37, 0112 78 66 16 மற்றும் 0112 78 42 08 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இது தவிர, 0112 78 44 22 என்ற தொலைநகல் இலக்கம் மூலமாகவும், பரீட்சைத் திணைக்களத்தின் gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் இது குறித்து அறிவிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

 

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்தது.

 

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நடைபெற்று வந்த உயர் தரப் பரீட்சை அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...

நுவரெலியாவுக்கு இரவு நேர பயணம் வேண்டாம்!

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது. இன்று (12) நிலவரப்படி,...