நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
ஸோஹ்ரான் மாம்டானி ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளர் ஆவார். இவர் உகாண்டாவில் பிறந்தவர்.
இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து).
இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, முன்னாள் ஆளுநரும் சுயேச்சையாகப் போட்டியிட்டவருமான எண்ட்ரூ கியூமோ, மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்ட்டிஸ் ஸ்லிவா ஆகியோரைத் தோற்கடித்து இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளார்.
நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






