Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி இன்று (04) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள, இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உயர்மட்டக் கூட்டத்துக்கு தலைமை தாங்கவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடனும் அவர் இணைந்து தலைமை வகிப்பார்.

மேலும், வருகை தந்துள்ள இராஜாங்க அமைச்சர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். அத்துடன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்கவையும் அவர் சந்திக்கவுள்ளார்.

மத்திய கிழக்கில் இலங்கையின் மிக முக்கியமான வர்த்தகப் பங்காளிகளில் ஐக்கிய அரபு அமீரகம் ஒன்றாகும். 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 7வது பெரிய ஏற்றுமதி நாடாக அது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஒரே ஒரு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களைக் கொண்ட நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...