ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசை “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது.
ஒரு பாதியை “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக” மோகிருக்கு வழங்கவும், மற்ற பாதியை “படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக” அகியோன் மற்றும் ஹோவிட்டிற்கு கூட்டாக வழங்கவும் முடிவு செய்துள்ளது.