Date:

இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன் போது, டிரம்ப் ஜனாதிபதிக்கு இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் விருதான இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம் (Israeli Presidential Medal of Honor) வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இந்த விருது வரும் மாதங்களில் வழங்கப்படும்

அவருக்கு விருது அறிவிப்பு செய்யப்பட்ட பிறகு, டிரம்ப் பணயக்கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார்

இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, காசா அமைதி மாநாட்டில் (Gaza Peace Summit) கலந்து கொள்ள டிரம்ப் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh) பகுதிக்குச் செல்ல உள்ளார்

இந்த மாநாட்டில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, பிரெஞ்சு ஜனாதிபதி எம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மன் சான்சலர் ஃப்ரீட்ரிஷ் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஸ்பானிஷ் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும், 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்

பணயக்கைதிகளை விடுவிப்பதில் முக்கிய பங்களிப்பைச் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சில மணி நேரங்களுக்கு முன்பு இஸ்ரேலின் பென் குரியான் சர்வதேச விமான நிலையத்தை (Ben Gurion International Airport) அடைந்தார்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் ஆகியோரும் அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்

மத்திய கிழக்கிற்கான ஜனாதிபதி டிரம்பின் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஆலோசகர் ஜெரால்ட் குஷ்னர் (Jared Kushner), டிரம்பின் மகள் மற்றும் குஷ்னரின் மனைவி இவான்கா டிரம்ப் (Ivanka Trump) ஆகியோரும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்

பின்னர், ஜனாதிபதி இஸ்ரேலிய பாராளுமன்றமான க்னெசெட்டிற்கு பயணம் செய்தார்

.

.

.

.

.

.

.

.

 

ளுமன்றமான க்னெசெட்டிற்கு பயணம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய வரி

கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு...

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி...

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...