அண்டவெளிக்கு வெளியேவும் புதிய கோள் ஒன்று இருப்பதற்கான அறிகுறிகளை நாசா விண்வெளி ஆய்வு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த அறிகுறிகள் உறுதியாகும் போது, அண்டவெளிக்கு வெளியே உள்ள முதல் கோள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது.
நாசா ஆய்வு மையத்தின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி அண்டவெளிக்கு வெளியே புதிய கோள் ஒன்று இருப்பதற்கான சமிக்ஞையைக் காட்டியுள்ளது.
புதிய கோள் 5000 க்கு அதிகமான புறக்கோள்களைக் கொண்டிருக்கும் என்று நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
புறக்கோள்களின் நகர்வைக்கொண்டே புதிய கோள் இருப்பதற்கான அறிகுறி வெளியாகியுள்ளது.
புறக்கோள்கள் அவை சுற்றும் விண்மீனைச் சுற்றி வரும்போது, அந்த விண்மீனில் இருந்து வரும் வெளிச்சம், பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தடுக்கப்படும். கோள்கள் கடப்பதால் வின்மீன்களின் ஒளி மங்குவதைத் தொலைநோக்கி மூலம் காணலாம்.
எக்ஸ்-ரே ப்ரைட் பைனரி என்கிற ஒரு வகையான விண்வெளிப் பொருளிலிருந்து வரும் எக்ஸ்-ரே கதிர்களின் பொலிவு குறைவாக இருந்ததை நாசா நிபுணர் குழு ஆராய்ந்துள்ளது.
1999 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கியே புதிய கோள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளது.