Date:

அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – துமிந்த சில்வா

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் கண்டி – கொக்கனகல, மல்கமன்சந்தி, பூஜாப்பிட்டி, மேல்கித்துல்கல ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் துமிந்த சில்வாவின் தலைமையில் நேற்று (25) கையளிக்கப்பட்டது

இந்நிலையில், ஹரிஸ்பத்துவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட துமிந்த சில்வா இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

குறைந்த வருமானம் கொண்ட சாதாரண பொதுமக்களுக்குச் சேவையாற்றும் நிறுவனமே வீடமைப்பு அதிகார சபையாகும்.

அதில் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

குறிப்பாகக் கொழும்பு மாவட்ட மக்களுக்காகப் பணியாற்றும்போது மக்களின் துயரம் எத்தகையது என்பதனை நான் அறிந்திருக்கிறேன்.

இதன் காரணமாகவே எனக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்.

இதன் மூலம் எதிர்காலத்தில் 70,000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான சிறந்த சேவையாற்றுபவர்களையே பொதுமக்கள் விரும்புவார்கள்.

நான் அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பேனா இல்லையா என்பது தெரியாது.

எனினும் சிறந்த சேவைகளை வழங்கியதன் காரணமாகவே எனக்கு இவ்வாறான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.

வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்புகளை ஏற்றதன் பின்னர் இரவு 9 மணிவரையில் பணிகளை நிறைவு செய்தே வீட்டிற்கு செல்கிறேன்.

எனினும், சில பணியாளர்கள் மாலை 4 மணிக்கே அலுவலகத்திலிருந்து செல்கின்றனர்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில், வெள்ளிக்கிழமை (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் (இலங்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373