கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று (25) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
தனிப்பட்ட விஜயமாக இன்று இலங்கைக்கு வருகை தரும் அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளதாக தி ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
700 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.
அதற்கமைய, அதில் 51% பங்குகள் அதானி நிறுவனத்திடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Date:
அதானி நிறுவனத் தலைவர் ஜனாதிபதியை சந்திக்கிறார்
