Date:

மல்வத்து ஓயாவில் கலக்கும் மருத்துவக் கழிவுகள்…!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளின் மலம், சிறுநீர் உள்ளிட்ட கழிவுநீர் ஒழுங்கற்ற முறையில் வெளியேற்றப்படுவதால், பிரதேசத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நகரின் மைய கழிவுநீர் அமைப்பு மூலம் அனுராதபுரம் மல்வத்து ஓயாவில் கலப்பதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அப்பிரதேசத்தின் தேரர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையால், சுவபா உயனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த கழிவுநீர் மல்வத்து ஓயாவில் கலப்பதால், அங்கு குளிக்கும் பிரதேசவாசிகளுடன் சுற்றுலா பயணிகளுக்கும் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய மனிதநேயத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர், அனுராதபுரம் சோமரதன தேரர், இந்த பிரச்சினையை தீர்க்க பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் பிரதேசத்தில் பல சுகாதார பிரச்சினைகள் உருவாகலாம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதற்தடவையாக 4,800 அமெரிக்க டொலர்...

நடுங்கும் நுவரெலியா..| நாட்டின் இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு!

இன்று (21) அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4...

பிறை தென்பட்டது!

இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அகில...

ஆசிரியர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01...