Date:

சிறைச்சாலைகள் ஆணையாளர்க்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்த நீதவான், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதால் பிணை மனுவை பரிசீலிக்க முடியாது என்று கூறினார்.

அதன்படி, பிணை மனுவை நிராகரித்த மேலதிக நீதவான், வழக்கை நாளை நிரந்தர நீதவான் முன் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டார்.

அதுவரை, சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியுடன் மாலைத்தீவு சென்ற ஏழு பேரின் வேலை போனது

ஜனாதிபதி அனுரகுமாரவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது, கட்டுநாயக்க  விமான நிலையத்தில் Duty...

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர் எஸ்.எம்....

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள்...