Date:

வறுமைக்கு தீர்வு தேடி இந்தியா புகுந்த இலங்கை குடும்பம் கைது!

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...