Date:

தகவல் தெரிந்தால் அழையுங்கள்!

தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி சிறிசந்த சேவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, இந்தக் குற்றம் தொடர்பான விசாரணையின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் புகைப்படம் குற்றப் பதிவுப் பிரிவின் அதிகாரி ஒருவரால் வரையப்பட்டுள்ளது.

அந்த வரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது,

சந்தேக நபர் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர் என்பதுடன், சுமார் 5 அடி 9 அங்குல உயரம், வெளிறிய நிறம் மற்றும் வட்ட முகம் கொண்டவர்.

அதேநேரம் கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஆணும் பெண்ணும் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சம்பவம் குறித்தும் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் குற்றம் தொடர்பான விசாரணையின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்ல உதவிய ஒரு சந்தேக நபர், கொட்டாஞ்சேனை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் முன்னெடுத்த விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் புகைப்படம் குற்றப் பதிவுப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியால் வரையப்பட்டுள்ளது.

குறித்த வரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது,

 

சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

தொலைபேசி எண்கள்

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 – 8591571

கொட்டாஞ்சேனை குற்றத் தடுப்பு பிரிவு – 071-8596386

குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி – 074-0253623

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...

செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு

இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக...

அமேசனின் கிளவுட் சேவைகள் உலகளாவிய ரீதியில் செயலிழப்பு

அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப சிக்கல்களால் உலகளாவிய ரீதியில்...