Date:

கொழும்பு மாநகரசபையில் NPP ஆட்சி அமைத்தால்… அது மக்கள் ஆணைக்கு முரண்..!

“ கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது மக்கள் ஆணைக்கு முரணான செயலாக அமையும்.

எதிரணிகள் வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே, அரசாங்கத்துக்கு எதிரான சக்திக்கு ஆதரவு வழங்குவதில் எமக்கு பிரச்சினை இருக்காது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் கொள்கைகள் வெவ்வேறானவை. எனினும், நாட்டின் நலன்கருதி பொது விடயங்களின்போது ஒத்துழைப்புடன் செயற்படக்கூடும்.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...