Date:

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்த புதிய முறை இன்று முதல் அறிமுகம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும் வாயில்களில் இன்று முதல் குறித்த சேவை வசதிகள் செயற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் திறமையான போக்குவரத்து சேவையை நிறுவுவதற்கும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுவதற்கும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி இது ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...