Date:

கொட்டாஞ்சேனை மற்றும் சிலாபத்தில் துப்பாக்கி சூடு!

கொட்டாஞ்சேனையில் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று சிலாபம் – விலத்தவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து...

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப்...

எரிபொருள் விலை குறித்து OPEC+ அமைப்பு திடீர் தீர்மானம்!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில்...

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின்...