தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காகியுள்ளது.
இதனிடையே தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆம் பீஸ்ட் படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். திட்டமிட்டபடி 120 நாள் படப்பிடிப்பில் 80 நாள் படப்பிடிப்பு முடித்துள்ளார்களாம்.
அடுத்த 40 நாள் படப்பிடிப்பு 2 கட்டங்களாக நடக்கும் என்றும், டிசம்பரில் ஷூட்டிங் நிறைவடைந்து. படத்தை 2022 சம்மரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.