Date:

கடவுச்சீட்டுக்கான முற்பதிவு இடைநிறுத்தம்-குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த மாதத்துக்கான முற்பதிவுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான தினங்கள் மற்றும் நேரங்களை பொதுமக்கள், முற்பதிவு செய்து கொள்ளமுடியும்  என்றும் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திகதி மற்றும் நேர முற்பதிவு வசதியின் கீழ், கடந்த சில நாட்களில் நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்கள்  வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த திங்கட்கிழமை (18) மாத்திரம் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான 4,700 விண்ணப்பங்கள் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், கடவுச்சீட்டு பெறும் போக்கு இவ்வாறு இருப்பதன் காரணமாக திணைக்களம் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நெரிசல் குறையும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று...

ட்ரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல்...