Date:

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – கல்வியமைச்சு எடுத்துள்ள நடவகை

கொழும்பின் பிரபல பாடசாலையின் 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடம் அது குறித்த விபரிப்புக்களை பெறவும், சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

 

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

 

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது.

 

உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

 

எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,...

தென்னிலங்கையில் விசேட சோதனை – 457 பேர் கைது

காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு...

ஒன்றரை கோடி பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காய் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம்...