பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கான அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை லாகூர் மற்றும் கராச்சிக்கான அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது பிராந்தியத்தில் பல விமான இரத்துகள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தது.
லாகூர் மற்றும் கராச்சி விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள், பயண அட்டவணையை மாற்றுவது அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான மேலதிக தகவலுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
இடைநீக்கத்தின் காலம் குறித்து மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை