இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 40 வீத வாக்குபதிவுகூட இடம்பெறவில்லை.
நண்பகல் 2 மணி வரை நிலைவரப்படி
, கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு
கம்பஹா மாவட்டத்தில் 36 சத வீத வாக்குப் பதிவு
களுத்துறை மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவு
அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு
பதுளை மாவட்டத்தில் 48 சத வீத வாக்குப் பதிவு
இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவு
கேகாலை மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு
திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சத வீத வாக்குப் பதிவு
புத்தளம் மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு
மொனராகலை மாவட்டத்தில் 43 சத வீத வாக்குப் பதிவு
மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவு
கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.