சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூக கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.