Date:

கண்டியர் திருமண சட்டத்திலும் திருத்தம்

மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1997 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க திருமணப் பதிவு செய்தல் (திருத்தப்பட்ட சட்டம்) மூலம் திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரை திருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சிறுவயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் விருப்பு ஒப்புதல் அவசியமெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

குணரத்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்குத் தீர்ப்புக்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது. அவ்வாறான திருமணத்திற்கு பெற்றாரின் விருப்பு ஒப்புதல் இருத்தல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது.

குறித்த வழக்குத் தீர்ப்புக்கமைய தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்தவர் ஒருவருடைய உடன்பாட்டுடன் சிறுவயதுக்காரர்களின் திருமணத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களுக்கு ஏற்புடைய உறுப்புரைகளை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, தற்போது முஸ்லிம் திருமண மற்றும் திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...