எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (23) காலை இத்தாலிக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 09.30 மணியளவில் அபிதாபி சென்று, பின்னர் அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் இத்தாலிக்கு பயணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.