Date:

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

அந்த சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 

 

எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று (22) இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது இந்த பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

அப்போது, ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த சுமார் 500 கைதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையுடன் நடந்து கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...