Date:

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.

 

ஏப்ரல் 10 ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 9.30 மணி – 10.00 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

 

பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதத்தை நடத்தவும், மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த பாராளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...