உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டது.
மேலும் நேற்று நடந்த எபிசோடில் நதியா சாங் வெளியேற்றப்பட்டார், தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான நிரூப் தற்போது பார்வையாளர்களிடையே பிரபலமாகியுள்ளார்.
சமீபத்தில் நிரூப் தனது முன்னாள் காதலியான யாஷிகா குறித்து பேசியிருந்தார். அதுமட்டுமின்றி அவரால் தான் தனக்கு பல வாய்ப்புகள் கிடைத்ததாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே தற்போது நிரூபின் முன்னாள் காதலி யாஷிகா மட்டுமில்லை அபிராமி என்பதும் தெரியவந்துள்ளது. ஆம், நிரூப் அபிராமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
யாஷிகாவிற்கு முன் நிரூப் அபிராமியை தான் காதலித்து வந்ததாக தகவல்கள் பரவி வருகிறது. அபிராமி பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்து.