Date:

ஐ.தே.கட்சியின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

 

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம கொலையாளி தொடர்பில் முக்கிய தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக...

இன்றும் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. அந்த வகையில்...

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் 'மிடிகம லாசா' என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர...

விசேட பண்ட வரி;கிழங்கு வெங்காயம் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம்

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க...