Date:

மின் துண்டிப்பு குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

 

இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

 

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணி நேரத்திற்குள் 4 பிரிவுகளாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

 

இருப்பினும், நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை.

 

தற்போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும்...

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...