இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே ஒரு சுமூகமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்று (05) காலை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் பங்கேற்றுள்ளார்.
அண்மித்த நாடுகளாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர உறவுகளையும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமாக வேரூன்றியுள்ள மத, கலாசார மற்றும் சமூக உறவுகளையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவுகளை இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது நினைவு கூர்ந்தார்.