Date:

எமது தேசத்தின் பெறுமையினை உலகறியச் செய்வோம் சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

இலங்கையின் சுதந்திரத்தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசத்தினை கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் பயணிப்பது காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அமேசன் கல்லுரி மற்றும் அமேசன் கெம்பஸ் நிறுவகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் புரிந்துணர்வுடனும்,தியாகங்களுடனும் எமது நாட்டினை கட்டியெழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையின் 77 வது சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை அடக்கு முறையாளர்களிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு இன்றுடன் 77 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில்,இன்னும் எமது நாடு பொருளாதார ,கலாச்சார மற்றும் இதர துறைகளிலும் பின்தங்கிய நிலையினையே கண்டுள்ளது.

இதற்கு காரணம் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தணையின் வீரியம் குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.

குறிப்பாக பல்லின அழகான சமூக கட்டமைப்பினை கொண்ட எமது தாய் நாட்டின் பெறுமையினை உலகறியச் செய்வது எமது கடமையாகும்.

எமது தேசத்தின் அடையாளமே எமது வேற்கை என்பதை புரிந்து எம்மில் காணப்படும் மாற்று சிந்தனைகளை புறந்தள்ளி இலங்கையின் பிரகாசத்திற்கும், புரிந்துணர்வு,அன்பு பறிமாற்றம்,பரஸ்பரம் என்பனவற்றினை சிரம் கொண்டு பயணிக்கும் நாளாக இன்றைய சுதந்திர தினம் அமைய வேண்டும் என்று வேண்டுவதாக இல்ஹாம் மரைக்கார் மேலும் தமது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...