Date:

கொழும்பு மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

 

1446 ஹிஜ்ரி ஆண்டுக்கான

புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு (27) திங்கட்கிழமை இரவு கொழும்பு – 10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இரவு 7.45 மணி முதல் இடம்பெற்றது.

 

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு -10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

 

 

 

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு முஸ்லிம் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான என்.நிலூபர், அலா அஹமட், கணக்காளர் முஹம்மட் நிப்ராஸ் உட்பட திணைக்கள அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முப்தி, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஏ.சீ.எம். பர்ஸாத் உட்பட உலமாக்கள், அரச உயர் அதிகாரிகள், கொழும்பு பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், பள்ளிவாசல் குழு

உறுப்பினர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (பௌசி) மிஹ்ராஜ் இரவின் முக்கியத்துவத்தைப்பற்றி பயான் நடாத்தினார்.

 

அத்தோடு, விசேட சிறப்பு பிரார்த்தனையை (துஆ) மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் பிரதம இமாம் காரி அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ்

நவவி நிகழ்த்தினார்.

 

கொழும்பு-10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் தலைவர் மௌலவி ஏ.சீ.எம். பர்ஸாத் நிகழ்வில் நன்றியுரை நிகழ்த்தினார்.

 

புனித மிஃராஜ் தின இரவு நிகழ்வுகள் யாவும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேரடி வீதியை சுற்றி வந்த நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹோற்சவத்தின் 24ஆவது நாளான தேரடி...

FCID இல் ரணில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம் மாதம் சம்பளம் வழங்கப்படாது

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம் மாதம் சம்பளம் வழங்கப்படாது...

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...