Date:

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன மற்றும் மனைவி கைது

 

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

2014 ஆம் ஆண்டில் பிங்கிரிய மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென, கனியவள கூட்டுத்தாபனத்துக்கு உரித்தான சுமார் 61,46,000 ரூபாய் நிதியை முன்னாள் அமைச்சர் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அவ்வாறு பெற்றுக்கொண்ட நிதியினை நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்தமை என்பவற்றுக்காக, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் இன்று (22) காலை...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...