Date:

சீனாவுக்கான புதிய தூதரக அலுவலகம்

சீனாவில், Chengdu நகருக்கு அருகில் இலங்கை தூதரக அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவிக்கின்றது.

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 

“எங்களுக்குத் தேவையான இடம் மற்றும் வசதிகளை இலவசமாகத் தருவதற்கு மாநிலத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, வெளியுறவு அமைச்சகம் என்ற வகையில், எதிர்காலத்தில் Chengdu நகரில் புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க வாய்ப்பு கிடைக்கும்.”

 

ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இருதரப்புக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...