Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை 15 மாவட்டங்கள் பாதிப்பு!

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று மாலை 4:00 மணி முதல் இன்று மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

 

அதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, வில்கமுவ, யடவத்தை மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக 2ஆம் நிலை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், பதுளை மாவட்டத்தின் பசறை, பதுளை, ஹாலி-எல, கண்டி மாவட்டத்தின் பாததும்பர, பன்வில, மெததும்பர, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோரளை, நாவுல, பல்லேபொல மற்றும் மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மஞ்சல் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...

வீட்டில் இருந்து வேலை ; ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள்...

எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...