Date:

கல்கிஸை துப்பாக்கி சூடு – வௌியான மேலதிக தகவல்கள்

கல்கிஸையின் சிறிபுர பகுதியில் இன்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

சம்பவத்தில் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.

 

இவர் டுபாயில் பதுங்கியுள்ள பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘கொஸ் மல்லி’ என்பவரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.

 

துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்த சந்தேக நபர் 47 வயதுடையவர் என்றும், அவர் படோவிட்ட அசங்கவின் குழுவைச் சேர்ந்தவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

 

கொஸ் மல்லிக்கும் படோவிட்ட அசங்கவிற்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பன தலைமையில் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...