Date:

ஜனாதிபதி சீன விஜயம் – நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடு

 

ஹம்பாந்தோட்டை பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினொபெக் நிறுவனத்திற்கும் இடையே இன்று (16) காலை ஒப்பந்தமொன்று கைச்சாத்தானது.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடாக இது கருதப்படுகிறது.

 

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்றான சினொபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில், 200,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமையவுள்ளதோடு, இதில் பெரும்பாலான பகுதியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

 

இலங்கையில் சீனாவின் இந்த பாரிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, ஹம்பாந்தோட்டை பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும். இதன் நன்மைகள் விரைவில் முழு இலங்கை மக்களுக்கும் கிடைக்கும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜென்ஹோன்க், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியார் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...