Date:

மாடியில் இருந்து குதித்த 16 வயது சிறுமி – வௌியான மேலதிக தகவல்கள்

 

கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12ஆவது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நேற்று (10) இரவு 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது.

 

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொரளை பொலிஸார், சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

 

உயிரிழந்த சிறுமி கொழும்பில் உள்ள ஒரு முன்னணி மகளிர் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்து வந்ததோடு, இவர் பொரளை சர்பன்டைன் வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

 

இறந்த சிறுமி சிறிது காலமாக மன அழுத்தம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 

சிறுமியின் உடல் தற்போது தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...