Date:

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (9) நிராகரித்துள்ளார்.

அந்த தண்டனைக்கு எதிராக தேரர் மேல்முறையீடு செய்துள்ளதால், மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை மனுவை சமர்ப்பித்திருந்தனர்.

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனையுடன் 1,500 ரூபாய் அபராதத்தையும் விதித்தமை குறிப்பிடத்தக்கது

.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...