Date:

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மையில் காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால், இந்த சம்பவம் தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும், இந்தப் பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பொருட்கள் குறித்து விசாரித்து, எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு ஒரு பட்டியலை சமர்ப்பிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக்க, இந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச...

ஒரே நாளில் 20,000/- குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார்...

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...