Date:

முக்கிய கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை கடந்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் அதற்கான கடனுதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த கடன் தொகையை பயன்படுத்தி நாட்டின் மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பல அத்தியாவசிய திட்டங்களை மேற்கொள்ள மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க திட்டங்களின் அமைப்பில் சேர்க்கும் வகையில் பல அத்தியாவசிய டிரான்ஸ்மிஷன் லைன் திட்டங்களும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...