Date:

ஜோன்ஸ்டனுக்கு பிணை!

சதோச ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்க சென்றுள்ளமையினால் அன்றைய வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியில்லை என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

 

இதனைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரொக்கப் பிணையிலும் 1 மில்லியன் சரீரப்பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...