Date:

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு மாவட்ட வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால், அந்த மாவட்டத்திற்கு இன்று விநியோகம் செய்யப்படமாட்டாது என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 3ஆம் திகதி விசேட விநியோக தினமாக அறிவிக்கப்பட்டு. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...