Date:

Breaking ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: மேற்கு ஆசிய நாடுகளில் கடும் போர் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கடும் பதற்றம் உருவாகியுள்ளது.

ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள உள்ள வீடியோ பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் ஆதாரவாளர்களும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர்.

உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் கடும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...

பொரளை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்...

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை...

ரணிலை விடுதலை செய்க: சொல்ஹெய்ம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. தயவு...