கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு ‘இஹல கன்ஹிடிகம’ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும் இருவரும் பொல்கஹவெல மற்றும் புஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.