மட்டக்களப்பு நோக்கி இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதில் இரு யானைகள் உயிரிழந்துள்ளன.
சம்பவம் மின்னேரிய மற்றும் ஹிகுராக்கொட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்ட நிலையில், அவற்றில் இரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ரயில் இயந்திர சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர் பயணித்த பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன.
விபத்தில் மேலும் பல காட்டு யானைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எரிபொருள் எண்ணெய் தாங்கிகள் கவிழ்ந்ததில் தண்டவாளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது