Date:

டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி கொழும்பிலிருந்து இரண்டு பௌத்த பிக்குகளை பொதுத் தேர்தலில் களமிறக்குகிறது – ஊடக சந்திப்பு கொழும்பு…

டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி கொழும்பிலிருந்து இரண்டு பௌத்த பிக்குகளை பொதுத் தேர்தலில் களமிறக்குகிறது…

 

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுத் தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கியுள்ளதோடு, பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

 

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கிரிப்பன்னாரே விஜித தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோரே இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளனர்.

 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரிபன்னாரே விஜித தேரர்

 

“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சியில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட நான் தீர்மானித்தேன். தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதே எங்களின் ஒரே முயற்சியே தவிர, பதவிகளுக்கு நாங்கள் செல்லவில்லை. நாங்கள் ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம்” என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 

கொழும்பு மாவட்டத்தின் EPDP பட்டியலானது தலைமை வேட்பாளராக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் உட்பட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் ஆகிய அனைத்து இனக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

 

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைமை வேட்பாளரான முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் இராஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்… தோழர் டக்ளஸ் தேவானந்தாவே ஒரே எதிர்பார்ப்பு எனவும் இன் மத பேதங்கள் கடந்த ஒரே கட்சியாக வே இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம் என்றார்…

மேலும் இந்நிகழ்வில், கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகம் இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு நவோதய மக்கள் முன்னணியின் முன்னாள் ஊடக செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த...

ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம்...

USS TULSA’போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...